தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பா செய்யப்பட்டனர்.
ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தேர்வு தொடர்பான ஆவணங்களை அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது தேர்வுகள் இயக்கம் .அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.