நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு கணக்கிடப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகளில் தொற்று நோய் பாதிப்புகள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு 2021-2022 ஆம் ஆண்டுகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகளை இரண்டு பகுதிகளாக நடத்தி, அதனடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தலா 90 நிமிடங்கள் அடங்கிய தேர்வுகளுக்கு ஏற்ப சரியான பதிலை தேர்வு செய்யும் வகையில் வினாத்தாள் இருக்கும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.