Categories
மாநில செய்திகள்

BREAKING: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு…. தமிழக அரசு….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியில் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி மூன்றாவது வாரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |