10, 11, 12 ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 10, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 19-ல் தொடங்கவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.