தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories