Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10, 12 ஆம் வகுப்புக்கு மட்டும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று முதல் ஜூலை 31 வரை அகில இந்திய வானொலியில் ஒலி வடிவில் பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை நாள் ஒன்றுக்கு குறைந்தது 20 நிமிடங்கள் வீதம் நான்கு பிரிவுகளாக 80 நிமிடங்கள் பாடங்கள் ஒளிபரப்பபட உள்ளது. முதல் 20 நிமிடம் 10-ஆம் வகுப்புக்கும், அடுத்த 60 நிமிடங்கள் பன்னிரண்டாம் வகுப்புக்கும் பாடங்கள்  ஒலிபரப்பப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |