வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து உயர்கல்வித்துறை தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக உயர்கல்வித் துறை சார்பில் தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் சட்டவிதிகளை மீறி 10.5 சதவீத இட உள் ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆணையங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் சார்பில் தனியாக மேல்முறையீடு செய்யப் பட்டிருந்த நிலையில், தற்போது உயர் கல்வித்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.