சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை மத்திய அமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் தமிழகத்தில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.இவர்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தவிர பிற நாட்களில் வாரத்தில் ஆறு நாட்களுக்கு என பள்ளிகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கான பாடத்திட்டங்களும் தற்போது 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
Date-sheet of @cbseindia29 board exams of class Xll.
Wish you good luck!#CBSE pic.twitter.com/LSJAwYpc7j— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) February 2, 2021
இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ளார். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் மே 4 ஆம் தேதி தொடங்கி ஜூலை 7ஆம் தேதி வரையும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 11 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்றும், மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க 30 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.