பள்ளிக்கல்வித்துறை வளாகத்திலேயே இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இன்று நான்காவது நாட்களாக போராட்டம் நடத்தி வரக்கூடிய சூழ்நிலையில் இதுவரை 107 ஆசிரியர்கள் தொடர்ந்து மயக்கம் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரி சம்பளமும், ஒரு மாதம் முன்கூட்டியே சேர்ந்தவர்களுக்கு உயர்வாக சம்பளமும் வழங்கப்படுகிறது. இருவருமே ஒரே வகுப்புகளுக்கு தான் பாடம் எடுக்கின்றோம். ஆனால் ஒரூ மாதம் தாமதமாக சேர்ந்த எங்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகவும், இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.