Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – புதிய திருப்பம் …!!

தமிழக முதல்வரின் கடிதம் மூலமாக அதிமுக 11 எம்.எல்.எக்களின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு பிரவரி 18ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்று நம்பிக்கை வாய்க்கெடுப்பு நடைபெற்றது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்கள் அரசின் கொறோரா உத்தரவை மீறிவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் சபாநாயகருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,

11 சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாக செயல்பட்டு இருந்தாலும் , தற்போது ஒரே அணியாக செயல்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் தன்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்த 122 எம்எல்ஏக்களுக்கு மட்டுமே அரசு கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தார. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டதால் அவர்கள் மீது  அரசு  கொறடா உத்தரவைப் பிறப்பிக்கப் படவில்லை என்றும், இதனால் இந்த 11 எம்எல்ஏக்கள் மீதான கட்சி தாவல் தடை சட்டம் என்பது பொருந்தாது, அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான எந்த விதமான விதிகளும் இல்லை என்ற ஒரு விஷயத்தை தமிழக முதலமைச்சர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |