தமிழகத்தில் வருகிற 14-ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்க கடலில் உருவான அசானி புயல் ஆந்திரா – ஒடிசா இடையே கரையை கடந்த போதிலும், பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, தேனி ,திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.