Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: 12 நாடுகளில் இருந்து வந்த…. 6 பேருக்கு கொரோனா…. அதிர்ச்சி…!!!

தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிஸ்க் நாடுகள் என்று வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளிலிருந்து வந்த ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனை தொடர்ந்து அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா? என்று கண்டறிய 6 பயணிகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |