Categories
மாநில செய்திகள்

BREAKING : அடுத்த 12 மணி நேரத்தில் புயல்….. வானிலை எச்சரிக்கை….!!!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று புயலாக உருவெடுத்து நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயல் சின்னமாக வலுப்பெற்றது.

இந்நிலையில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த  தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஜாவத் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா – ஒடிசா அருகே வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |