12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வங்ககடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.