நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுதும் 12 முதல் 18 வயதினருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் தற்போது சிறுவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Categories