தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு பின் கட்டுப்பாடுகள் இல்லாத முதல் கொண்டாட்டம் இது என்பதால், ஒரே இடத்தில் சுமார் 1,00,000க்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இதனால், நெரிசல் ஏற்பட்டு பலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
Categories