ஐபிஎல்லின் 15-ஆவது சீசனுக்கான மெகா ஏலம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து மார்ச் 26-ஆம் தேதி மும்பையில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொண்ட 15-ஆவது ஐபிஎல் தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, மார்ச் 26-ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ள 15 ஆவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் எந்த சுழற்சிமுறையில் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார்கள் என்ற தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அட்டவணையில் முதல் நாளான மார்ச் 26-ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 10 அணிகள் மோதும் 70 லீக் போட்டிகளின் அட்டவணை மட்டுமே வெளியாகியுள்ளது.