நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் 15 நாட்கள் முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடியாக அறிவித்துள்ளார். பெட்ரோல் பங்க், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்து அலுவலகங்களும் நாளை முதல் 15 நாட்களுக்கு மூடப்படும். தேவை இல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.