Categories
மாநில செய்திகள்

BREAKING: 15 மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடு… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. இதனால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்து முதல்வர்கள் அறிவித்து வருகின்றன.

தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை அதாவது டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்களில், 90 மாவட்டங்களில் தற்போது கொரோனா அதிகமாக உள்ளதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதார துறை கூறியுள்ளது. குறிப்பாக மலைப் பிரதேசங்களுக்கு செல்வோர் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

Categories

Tech |