அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி தொடர்ந்து பல நாட்கள் மற்றும் பலமுறை சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இந்த வழக்கில் குடியிருப்பின் லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 11 மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. கடைசியாக 2019 டிசம்பர் மாதம் முடிவடைந்தது. 17 பேரில் பாபு என்பவர் சிறையிலேயே மரணம் அடைந்ததால் 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று போக்ஷோ நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார். அவர் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரனை தவிர 15 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.