Categories
சற்றுமுன் பல்சுவை புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

 #BREAKING: நாளை மறுநாள் 16 மாவட்டங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி 11 மற்றும் 12 ஆகிய இரண்டு தேதிகளில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அநேக மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக 11-ம் தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் வடகிழ் தமிழகம் மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர்,

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதே நாளில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழை பெய்தற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

12ஆம் தேதி தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் வட தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,  காரைக்கால் பகுதிகளின்  ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |