மியான்மர் நாட்டில் சுரங்க விபத்தில் பலியான தொழிலாளர்கள் எண்ணிக்கை 162ஆக அதிகரித்துள்ளது.
மியான்மர் நாட்டில் பச்சை மரகத கல்லை வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நடைபெற்ற விபத்தில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் தொழிலாளாளர்கள் சிக்கினர். முதலில் இந்த இடிபாடுகளில் சிக்கிய 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இருந்தும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருந்ததால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்து வந்தது.
இதையடுத்து மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி ஈடுபட்டு வந்தனர். மீட்கப்பட்ட பல தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் இந்த விபத்தில் 162 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் மியான்மர் நாட்டில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.