Categories
உலக செய்திகள்

BREAKING: 17 நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கம்…. ரஷ்யா திடீர் அறிவிப்பு….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புகள் கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து போர்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரைனின் தலைநகர் சுமி,கார்கிவ், மரியுபோல்,கீவ் ஆகிய நகரங்களில் சிக்கியுள்ள பொதுமக்கள், மாணவர்கள் வெளியேற தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளது. மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை மற்றும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன், அமெரிக்கா , ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி ரஸ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.இதில் ஐரோப்பிய ஒன்றியம், தைவான், தென் கொரியா, நார்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |