Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”சரக்கு ரயில் மோதி 17 தொழிலாளர்கள் பலி ” மகாராஷ்டிராவில் பரிதாபம் …!!

மகாராஷ்டிரா சரக்கு ரயில் மோதியதில் வெளிமாநில தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். அங்குள்ள அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக இந்த ரயில் பாதையை கடக்க முற்பட்டிருக்கலாம் என்றும், ரயில் பாதையில் ரயில் வராது என நினைத்து தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டு இருந்திருக்கலாம் என்றும்  முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள் இன்று காலை 6.30 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக தகவல் அளித்து இருக்கிறார்கள்.மேற்கொண்டு விசாரணை நடத்தி இந்த விபத்துக்கு காரணம் என்ன என்பதை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.சரக்கு ரயில் மோதி 17 பேரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது பரிதாபகரமான சம்பவமாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |