கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸை அழிப்பதற்கு பல முயற்சிகளுக்குப் பின்னர் தடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்ப்பிணிகள், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கும், மற்ற தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் 14 நாட்கள் இடைவெளி அவசியம். கொரோனா தடுப்புக்கு முதலில் செலுத்தப்படும் மருந்தையே இரண்டாவது முறையும் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.