Categories
மாநில செய்திகள்

BREAKING: 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை…. 5 மாவட்ட மக்களுக்கு அலர்ட்…. உடனே கிளம்புங்க….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அனைத்து இடங்களிலும் மழை நீர் தேங்கி வெள்ளம் போல காட்சியளிக்கிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.அதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளது. அதனால் ஐந்து மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வெளியேற்றப்படும் நீர் அதிகரிக்கும் என்பதால் தேனி, மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |