தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த ஐந்து நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது புதுச்சேரி காரைக்காலில் 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.