தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியில் வர முடியாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் மேலும் இரண்டு நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.