சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மழையின் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிச.13) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.