தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் முக கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர், மதுரை, கோவை மாவட்டங்களை தொடர்ந்து நெல்லை மற்றும் புதுக்கோட்டை பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அபராதம் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.