Categories
தேசிய செய்திகள்

BREAKING: 2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி?…. மத்திய அரசு அனுமதி…. புதிய தகவல்….!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட மருத்துவ வல்லுநர் குழு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வயதான குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட அனுமதி தரப்பட்டுள்ளது. வல்லுநர் குழு அனுமதியை தொடர்ந்து மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி தரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |