கொரோனா தொற்று குறைந்து பிறகு பிளஸ் டூ பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைனிலேயே பாடம் பயின்று வருகின்றனர். ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொதுத் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்திருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு தகவலை கூறியுள்ளார். அதில் கொரோனா தொற்று குறைந்த பிறகு பிளஸ் டூ பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொது தேர்வு தள்ளி போகுமா தவிர ரத்து செய்யப்படாது. 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பே பிளஸ்-2 தேதியை அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர் என கூறியுள்ளார்.