Categories
மாநில செய்திகள்

Breaking : புதிதாக 2 மாவட்டம்… 1 வட்டம்…. 37_ஆக அதிகரிப்பு… முதல்வர் அறிவிப்பு..!!

வேலூர் மாவட்டம் மேலும் இரண்டு மாவட்டமாக உருவாக்கப்படுமென்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறும் 73-ஆவது சுதந்திர தினக் கொடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றினார். பின்னர் அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலவர் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைகளுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மக்களின் குறை ஒரு மாதத்திற்குள் தீர்வு எட்டப்படும்என்று தெரிவித்தார். மாவட்ட நிர்வாக நடவடிக்கையை துரிதப்படுத்த வேலூர் மாவட்டத்தை கூடுதலாக இரண்டு மாவட்டமாக பிரிக்கப்படுமென்று முதல்வர் தெரிவித்தார்.

Image result for edappadi palanisamy

அதில் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் செயல்படுமென்று தெரிவித்தார். தென்காசி , கள்ளகுறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்த்து மாவட்ட எண்ணிக்கை 37_ஆக உயந்துள்ளது.அதே போல KV குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |