Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அசத்தல்…. பந்துவீச்சில் ”பதிலடி கொடுத்த சென்னை”…. மும்பையை நொறுக்கி ”அபார வெற்றி” ….!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசன் ஆட்டங்கள் இன்று தொடங்குகியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து அதன்படி, துபாய், சார்ஜா, அபுதாபி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது சீசன் போட்டியின் முதல் ஆட்டம் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.

நீண்ட காலமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு ரசிக்க முடியாமல் இருந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் மீண்டும் போட்டிகள் தொடங்க ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருகின்றனர். இந்த நிலையில் இன்றைய போட்டி தொடங்கி டாஸ் போடப்பட்டது. அதில் சென்னை அணி டாஸில் வெற்றிபெற்று பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவுக்கு பதில் போலார்டு கேப்டனாக செயல்பட்டார். மும்பை அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட் இழந்தாலும் கூட ( பாப் டூ பிளெஸ்ஸி, மொயின் அலி, அம்பதி ராயிடு -0 , ரெய்னா -4, தோனி 3 ) தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின்  பொறுப்பான அரைசத ஆட்டத்தால் ரன் சீரான வேகத்தில் உயர்ந்தது.

இதனிடையே ஜடேஜாவின் 26ரன், ப்ராவோவின் 8பந்தில் 23 என்ற அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியின் ரன் வேகம் உயர்ந்தது. போல்ட் வீசிய 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்ஸ், 1பவுண்டரி என பறக்க அந்த ஓவரில் 24 ரன்கள் கிடைக்க சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர்களில்6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன் குவித்தது. சென்னை அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட்டு 58பந்துகளில் 88எடுது கலக்கிய நிலையில் மும்பை அணி சார்பில் போல்ட், ஆடம் மில்னே, பூம்ரா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

157 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கமிறங்கிய முன்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக், அன்மோல்பிரீத் சிங் தொடக்கம் முதலே அடித்து ஆட முடிவெடுத்தனர். குயின்டன் டி காக் 12பந்தில் 17ரன் அடித்து தீபக் சஹர் பந்தில் ஆட்டமிழந்தார். மும்பை அணி வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Categories

Tech |