Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING : 20 இடம்…. 200 அதிகாரிகள்…. ரூ 25,00,00,000…. அள்ளிச்சென்ற IT .. சிக்கிய AGS …!!

AGS நிறுவனத்திடம் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் 25 கோடி கைப்பற்றப்பட்ட்தாக தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் 200க்கு அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிகில் பட வருமானத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக இந்த ரெய்டு நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடந்து வரும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் சென்று நடிகர் விஜய்யிடமும் விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர் விஜய்யின் 2 வீடுகளிலும் சோதனையை தொடர்ந்தனர்.

இந்நிலையில் AGS நிறுவனத்தில் மேற்கொண்ட சோதனையில் ரூ 25 கோடி பணம் , ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பணத்தை என்னும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதி படுத்தியுள்ளனர். இது சினிமாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |