2016 விஏஓ தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது
என்பிஎஸ்சி குரூப்-4 , குரூப் 2-ஏ தேர்வு முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து பல்வேறு தேர்வுகளில் முறைகேடு புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.இந்த முறைகேடு புகார்கள் சார்ந்த விசாரணைகள் எல்லாமே விரிவடைந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் தான் 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்டVAO தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைக்கு சிபிசிஐடி போலீசார் விஏஓ நாராயணன் என்பவரிடம் நடந்த விசாரணை பல்வேறு கேள்விகளை எழுப்பிள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற 813 பணியிடங்களுக்கான VAO தேர்வு குறித்த முழு ஆவணத்தையும் TNPSCயிடம் சிபிசிஐடி கேட்டுள்ளனர். நாளை அனைத்து ஆவணத்தையும் TNPSC கொடுக்க இருக்கின்றது.