2020ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரீமியர் லீக். சென்னை , ஹைராபாத் , பெங்களூரு , ராஜஸ்தான் , மும்பை , கொல்கத்தா , பஞ்சாப் , டெல்லி ஆகிய 8 அணிகள் மோதும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 13ஆவது IPL தொடர் அடுத்த மாதம் தொடங்க இருக்கின்றது.
இதில் ஒவ்வொரு அணியும் தலா இரு முறை மோதிக்கொள்ளும். அந்த வகையில் சென்னை அணி மோதும் முதல் 8 போட்டிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.