இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஏலம் நடைபெறும் இடம் குறித்து பிறகு அறிவிக்கப்படும் என கூறியுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை விடுவித்த நிலையில், அடுத்து வரும் வீரர்களுக்கான ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.