2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.