தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2026-இல் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இத்தனை காலமாக பாஜகவுக்கு தமிழகம் தேவைப்பட்டது. இப்பொழுது தமிழகத்திற்கு பாஜக தேவைப்படுகிறது. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2026-இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க போவது உறுதி என்று தெரிவித்துள்ளார்.