Categories
தேசிய செய்திகள்

BREAKING: 24 மணி நேரத்திற்குள் ஆபாச படங்கள்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

சமூக வலைத்தளங்களில் புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் உலா வருவது வழக்கம். ஆனால் அதனை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளம் நீக்கவேண்டும். புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூக வலைத்தள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களை அவதூறுகள் மற்றும் வதந்திகளை பரப்புவதற்காக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |