2ஆவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இபிஎஸ் தரப்பு தங்களின் அதிரடி வாதங்களை முன்வைத்து வருகின்றது. எதிர்மனுதாரர்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் அறிவிக்க வேண்டும்;
5தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை; கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் கோரிக்கை ஏற்கப்பட்டால் பெரும்பான்மையான உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராகிவிடும். அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளே பொதுக்குழு உறுப்பினர்கள்;
அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை ஒட்டுமொத்த உறுப்பினர்கள் முடிவாக தான் பார்க்க வேண்டும்; பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை ஆதரிக்கிறார்கள்; பொதுக்குழு உறுப்பினர்கள் 2432 பேர் ஒற்றை தலைமையை விரும்புவதாக கடிதம் அளித்துள்ளனர்;
ஒருவரின் சூழலை தனியாக பார்க்காமல் ஒட்டுமொத்த கட்சி நிலையைத்தான் பார்க்க வேண்டும்; மற்ற கட்சிகள் குடும்பத்தினரால் நடத்தப்படுகிறது; அதிமுகவில் மட்டும்தான் உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்படுகிறது என எடப்பாடி தரப்பு தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றது.