Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 25,000க்கும் கீழ் குறைந்தது கொரோனா – மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் நிம்மதியான செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இன்று புதிதாக 24, 405 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 21,72,751 ஆகவும், 460 பேர் இறந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25, 665 ஆகவும், 32,  221 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குணமடைந்தார் எண்ணிக்கை 18, 66, 660 ஆகவும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |