பொதுமக்கள், தரம் குறைவான தங்க, வெள்ளி நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் ஹால்மார்க் முத்திரைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அங்கீகரிக்கப்பட்ட, ஹால்மார்க்’ மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்கள், வியாபாரிகள் தரும் தங்கத்தை மதிப்பீடு செய்து, அதன் தரம் குறித்து பதிவு செய்து தருவர்.
இந்நிலையில் தங்க நகையின் தரத்தைத் குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. மேலும் 256 மாவட்டங்களிலும் ஹால்மார்க் முத்திரை கொண்ட 14, 18, 22 கேரட் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.