Categories
உலக செய்திகள்

BREAKING : 259 பேர் பலி ….. 11,791 பேர் உறுதி…. கொரோனா_வால் கதிகலங்கி நிற்கும் சீனா …!!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 259_ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 259_ஆக  உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா வைரஸ் தாக்குதல் 11,791 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |