Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் 2642 விசாரணை கைதிகள் விடுவிப்பு ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக 2642 விசாரணைக் கைதிகள் ஜாமினில் விடுவிக்க பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக சிறைத் துறை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழக சிறையில் உள்ள 2,642 விசாரணைக் கைதிகளை ஜாமினில் விடுவிக்க வைப்பதற்கான அந்த ஆணை என்பது தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பரோலில் வெளியே வெளியில் சென்ற கைதிகளுக்கும் பரோல் நீட்டிப்பு செய்யப்படுள்ளது.

அதே போல வெளியிலிருந்து சிறைக்கு வரும் கைதிகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்து 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு கைதியிடம் இருந்து மற்ற கைதிக்கு கொரோனா தொற்று வந்து விடக்கூடாது என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |