தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இதனைத்தொடர்ந்து ஜூன்14-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பேருந்து சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் அரசு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் இயக்க அனுமதி தரப்படும் என்றும், அடுத்த ஊரடங்கு தளர்வு அறிவிக்கும் போது பொது போக்குவரத்து குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.