Categories
மாநில செய்திகள்

BREAKING: 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. மக்களே அலெர்ட்டா இருங்க….!!!!

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |