இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 574/8 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்களிலும், 2-வது இன்னிங்சில் 178 ரன்களிலும் ஆல்அவுட் ஆனது. சிறப்பாக விளையாடிய ஜடேஜா பேட்டிங்கில் 175 ரன்கள், முதல் இன்னிங்சில் 5 விக்கெட், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.