தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருப்பூரில் வீரபாண்டி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.